• +94 77 199 0872/+94 76 663 6482

ரோயல்யூத்ஸ்

“பிறர்வாடப் பல செயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிரையெனப்பின்மாயும் பலவேடிக்கை மனிதரைபோல் நாம் வீழ்வோம் என நினைத்தாயோ??”

இளமை பருவத்தின் வயதினர் உலகமாயைகளில் வீழ்ந்துகிடக்க சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வீழ்ந்துகிடக்கும் ஏழைகளை கை கொடுத்து எழுப்ப, ருசி அறியா பல வயிறுகளின் பசி தீர்க்க, நிம்மதியான வாழ்வை நிரந்தரமாக்க, கல்வி எனும் கனவை காணும் ஏழைச்சிறுவர்களை கல்வி அவர்களின் உரிமை என்பதை உணர்த்த உதயமானது சில உள்ளங்கள் இணைந்து ரோயல்யூத்ஸ் என்னும் சக்தி.

 “யார் ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனை வாழவைக்கிறானோ அவன் இவ்வுலக சமுதாயத்தை வாழவைத்தவன் ஆவான்:” – அல்குர்ஆன்

ஒரு சமூகத்தின் முதுகெலும்பு இளைஞர்கள் ஆகும். இந்த இளைஞர்கள் என்னும் கற்றறிந்த, நற்பண்புகள்மிக்க, திறமையான, சமூகசிந்தனை கொண்ட, உதவிமனப்பான்மை நிறைந்த சிலவாலிபர்களின் கூட்டு ஒன்று சேர்ந்து உருவாக்கம் பெற்றதே ரோயல்யூத்ஸ்..... 

2012ஆம் ஆண்டு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய நூலகத்தினை அமைக்கும் பொருட்டு ஒன்றிணைந்து சில இளைஞர்களின் அமைப்பு அல்ஹம்துலில்லாஹ்

இன்று வரை சுமார் ஐந்தாவது வருடத்திலும் அதே சக்தியோடு அக்கரைபற்றில் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் ஏன் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கும் தம்மால் முடிந்த முயற்சிகளை திறம்பட அல்லாஹ்வின் உதவியோடு இஹ்லாசோடு செய்து வருவது ரோயல்யூத்ஸ்ஆகும்...

அரசியல்சார்புகளை உடைத்து, சமூகபிரிவுகளை களைந்து, வேறுபாடுகள் மறந்து “ஒற்றுமையே எமது பலம்” என்னும் தொனியில் ஓர் இளைஞர் படையாக உருவெடுத்து வலம் வருவது ரோயல்யூத்ஸ் அமைப்பாகும்.

அக்கரைப்பற்று பிரதேசத்தின் இளைஞர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைத்து வாலிபர்களையும் ஒன்றினைத்து ஒரு சிந்தனைமிக்க, சமூகபற்றுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதே ரோயல்யூத்ஸ் இன்நோக்கம்.

இன்று சுமார்நூற்றுக்கும் அதிகமான வாலிபர்களை அங்கத்தவர்களாக கொண்டு பாரிய செயற்திட்டங்கள் பலவற்றையும் செய்து கொண்டுவருகின்றது.

வறிய மக்களுக்கான உதவி, அனாதைகள், முதியோர்கள், ஏழைகளின் கல்விக்கான உதவி, சமூகத்தில் உள்ள தவிர்க்கப்பட வேண்டியவற்றின் விழிப்புணர்வு எனச மூகத்தின் இன்றியமையாத தேவைகளை மாத்திரம் செய்து கொண்டு செல்வதுதான் ரோயல்யூத்ஸ்.

 

Royal Youths

When the youths of our society lives in an imaginary world but some raised their hands for the rights of the society, to give hands to the poor and needy, unravel the hunger, provide permanent peaceful life, to present the dream of a poor children which is the education and to convey that these are the rights of them, where some hearts joint together as a power in the name Royal Youths.

And whoever saves one – it is as if he had saved mankind entirely. Holy Quran (5:32)

Youths are the backbone of a society.A few young men who educated, decent, competent, community -minded and helpful attitude joint together and created Royal Youths.

At the start they joined together to erect a library on 2012 at Pallikudiyiruppu. Alhamdulillah it’s still alive since four years with the same power and energy inside Akkaraipattu as well as other districts even given the full support to the foreign living Muslims up to their extent.      

The one and only Royal Youths organization gathered youths together in the tone of “unity is our strength," by breaking the political leanings, social divisions, forgetting the differences etc. The aim of royal youths is to generate a society of contemplative social minded young people not only in Akkaraipattu but also whoever interested in the progress of society wherever they are. There are about more than a hundred members and has made ​​a series of major projects till now.

To help poor, orphans, the elderly, education for the poor, helping to raise awareness in the community and to execute the community's essential need. These are the only works done by Royal Youths with the grace of ALLAH AZZA WAJAL

  • 204A, 5/6, Common Road, Akkaraipattu.
  • +94 77 199 0872/+94 76 663 6482
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Recent Works

Send Us A Message

  Mail is not sent.   Your email has been sent.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. Cookie policy. I accept cookies from this site. Agree